சென்னப்ப நாயகர் பட்டினம் – நூல் வெளியீட்டு விழா

சென்னப்ப நாயகர் பட்டினம் – நூல் வெளியீட்டு விழா

க.செந்தில்குமார், ரமேஷ்கோபால் கவுண்டர் இருவரும் சேர்ந்து எழுதிய சென்னப்ப நாயகர் பட்டினம் என்னும் ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை நாளான ஆகஸ்டு 22 ஆம் நாளன்று (Madras Day), சென்னை எம்எம்டிஏ 100 அடி சாலையில் உள்ள லீக் கிளப்பில் சிறப்பாக நடந்தேறியது.

 

வரலாற்று ஆய்வாளர்களால் இந்தாண்டு எழுதி வெளிவந்துள்ள நூல்களில் மிக முக்கியமான நூலாக இந்த நூல் பார்க்கப்படுகிறது. சென்னப்ப நாயகர் யார்? ஆங்கிலேயர்கள் வணிக நகரம் உருவாக்கி கொள்ள தற்போதுள்ள சென்னை நிலப்பகுதியை யாரிடமிருந்து வாங்கினர். 17, 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற நிலப்பரப்பின் அரசியல் நிலை என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூல் முற்றுப்புள்ளி வைத்திருப்பதுடன் மேலும் பல ஆய்வுக்களங்களுக்கும் இட்டுச்செல்கிறது.

நூலைப் பெற்றுக்கொண்டு முனைவர் தனவேல் இஆப (ஓய்வு) அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். தமிழ்ச்சமூக உணர்வாளர்கள், வாசிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என மொத்தமாக திரண்டு ஆர்வத்தோடு இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.

(எழுத்துதவி + பட உதவி – முனைவர் அமுல்ராஜ்)

CATEGORIES
TAGS
Share This